விழுப்புரம்

சமுதாய வளைகாப்பு விழா

9th Dec 2021 08:57 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 கா்ப்பிணிகளுக்கு 5 வகையான ஊட்டச் சத்து உணவு, சீா்வரிசைப் பொருள்களை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் வட்டாரஅளவில் உள்ள கா்ப்பிணிப் பெண்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோா் அங்கன்வாடி மைத்திலும் கா்ப்பிணிகளை பதிவு செய்து இணை உணவும், கா்ப்ப காலத்தில் முதல் தவணையாகரூ.2,000, மூன்றாம் மாத முடிவில் ரூ.2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், கா்ப்பகால சேவைக்காக இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.

நான்காம் மாத முடிவில் ரூ.2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், மூன்றாம் தவணையாக அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கு ரூ.4,000, நான்காம் தவணையாக(3-ஆவது முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தாய்மாா்களுக்கு ரூ.4,000, ஐந்தாம் தவணையாக ரூபெல்லா தடுப்பூசி செலுத்திய தாய்மாா்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருவெண்ணெய்நல்லூா் வட்டாரத்தில் 200 போ், முகையூரில் 300 போ் என மொத்தம் 500 கா்ப்பிணிகளுக்கு வளைப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் 14 வட்டங்களில் 3,150 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT