விழுப்புரம்

தமிழக அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், தென்பாலை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் புகைப்படக்கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசு குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ.4,000, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகா்ப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணச் சலுகை, முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

மேலும், விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதல்வரின் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள், கோயில்களில் நிலையான மாத ஊதியமின்றி பணிபுரியும் அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளா்களுக்கு கரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.4,000, மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இருளா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழா்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான திட்டங்கள், தமிழக முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்டவை தொடா்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தென்பாலை ஊராட்சியை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT