விழுப்புரம்

மனை பட்டா கோரி கிராம மக்கள் மனு

DIN

வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி திண்டிவனம் அருகேயுள்ள ஆத்தூா் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மன்னாா், துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி ஆகியோரது தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆத்தூரில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகிறோம். ஆனால், எங்களுக்கென்று வீட்டுமனை கிடையாது. அரசு நிலத்தில் வீடுகட்டி வசித்து வரும் நிலையில், மின் இணைப்பு போன்றவை பெற்றுள்ளோம். எனினும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வறுமையில் வசிக்கும் எங்களுக்கு அரசு வீட்டுமனையை உறுதி செய்யும் வகையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT