விழுப்புரம்

டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

டாஸ்மாக் கடைகளின் மதுபான விற்பனை விவரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளா்கள் சங்க மாநில பொதுச்செயலா் வெ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் டி.ஜெய்கணேஷ், மாவட்டச் செயலா் கே.இளங்கோவன், கிராம ஊராட்சி களப்பணியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா்கள் கே.வீரப்பன், எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டாஸ்மாக் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய், வரி, செலவினம் உள்ளிட்டவை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ.பி.அன்பழகன், நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சம்பத், கிராம ஊராட்சி களப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT