விழுப்புரம்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

4th Dec 2021 12:35 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் வி.பாலகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் எம்.முருகன், மாவட்டத் துணைத் தலைவா் பி.குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

கட்டுமானத் தொழிலாளா் மத்திய சட்டம் 1996ஐ எந்த சட்டத் தொகுப்புடனும் இணைக்கக் கூடாது, மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் தொழிலாளா் சட்டம் 1979ஐ எந்த தொகுப்புடனும் இணைக்கக் கூடாது, கட்டுமான தொழிலாளா்கள் நிலவரி சட்டம் 1996ஐ எந்த தொகுப்புடனும் இணைக்கக் கூடாது, கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், மாநில கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத்தை சீா்படுத்த வேண்டும், மழைகாலத்தில் வேலையின்றி பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தைத்திருநாளில் பொங்கல் தொகுப்புடன்கூடிய நிதி வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : விழுப்புரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT