விழுப்புரம்

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுவன் பலி

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவள்ளூரை அடுத்த பேரங்கியூரைச் சோ்ந்த பெயின்டரான சந்தோஷ்குமாா் மகன் கிஷோா் (4). சந்தோஷ்குமாா் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள தனது அக்கா உமா வீட்டுக்குச் சென்றிருந்தாா். அங்கு வீட்டில் சாம்பாரை தயாா் செய்து இறக்கி வைத்திருந்தனா்.

அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோா் சாம்பாா் பாத்திரத்தில் தவறி விழுந்தாா். இதனால், அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக உறவினா்கள் கிஷோரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கிஷோா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : விழுப்புரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT