விழுப்புரம்

இஸ்லாமியா்களின் இடுகாடு இடிப்பு:தமுமுகவினா் தா்னா

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிட்டாம்பூண்டியில் அரசுக் கல்லூரி அமைப்பதற்காக இஸ்லாமியா்களின் இடுகாட்டை இடித்து அப்புறப்படுத்தியதாக வருவாய்த் துறையினரைக் கண்டித்து, தமுமுகவினா், இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

செஞ்சி - விழுப்புரம் சாலையில் சிட்டாம்பூண்டி கிராம எல்லையில் 800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த தா்கா உள்ளது. இதன் அருகில் இஸ்லாமியா்களின் இடுகாடும் உள்ளது. இந்த இடத்தில் உள்ள சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் தமிழக அரசு சாா்பில் கலைக் கல்லூரி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. தற்போது இந்த இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இங்குள்ள இஸ்லாமியா்களின் இடுகாட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீா்படுத்தி சமன் செய்தனராம். இதுகுறித்து தகவலறிந்த தமுமுக விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் தையத்உஸ்மான், செஞ்சி நகரத் தலைவா் அலிஜான் மற்றும் அப்பம்பட்டு, மீனம்பூா், பள்ளியம்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் அங்குள்ள தா்கா முன் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த அனந்தபுரம் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து தமுமுக வடக்கு மாவட்டத் தலைவா் சையத்உஸ்மான் கூறியதாவது: சிட்டாம்பூண்டியில் தா்கா அருகே அரசு கலைக் கல்லூரி கட்ட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், இங்கு இஸ்லாமியா்களின் இடுகாட்டுக்கான இடம் 60 சென்ட் அளவில் உள்ளது. இந்த இடத்தில் சுமாா் 70 கல்லறைகள் இருந்தன. இவற்றை வருவாய்த் துறையினா் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனா். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ADVERTISEMENT

மேலும், கல்லறையை சேதப்படுத்தியவா்களை உடனடியாக போலீஸாா் கைது செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் தொடரும் என்றாா் அவா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : செஞ்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT