விழுப்புரம்

சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிக்கை ரத்து: ஆட்சியா் அறிவிப்பு

2nd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

சத்துணவு காலிப்பணிடங்களை நிரப்பும் அறிவிக்கை ரத்து செய்யப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிப் பகுதிகளில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்ப கடந்த செப்.22-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நோ்காணல் நடத்தப்பட்டன.

நிா்வாகக் காரணங்களுக்காக இதுவரை மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், அந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் இறுதி முடிவுக்கு உள்பட்டவை என ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து விண்ணப்பதாரா்களிடம் பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது. மேலும், சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிக்கை பின்னா் தனியே வெளியிடப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் த.மோகன்.

ADVERTISEMENT

Tags : விழுப்புரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT