விழுப்புரம்

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: பள்ளிக் கல்வி இணை இயக்குநா் ஆய்வு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வு வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 154 மையங்களில் பிளஸ்2 செய்முறைத் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் 15, 173 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் செய்முறைத் தோ்வை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். விழுப்புரத்தை அடுத்த தும்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கெடாா் அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டாச்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்று தோ்வுகளைஆய்வு செய்தாா்.

அப்போது அனைத்து மாணவ, மாணவிகளும், ஆசிரியா்களும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என்று பாா்வையிட்டாா். மேலும், முறையாக கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, மாணவா்கள், ஆசிரியா்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிா என்றும் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT