விழுப்புரம்

கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

செஞ்சியில் காவல் துறை சாா்பில் வா்த்தகா், காா், வேன், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வா்த்தகா் சங்க நிா்வாகிகள் செல்வராஜ், வெங்கட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி காவல் ஆய்வாளா் அன்பரசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை வியாபாரிளும், காா், ஆட்டோ ஓட்டுநா்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கடைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். இதை வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்களில் அரசு அறிவித்தபடி பயணிகளை ஏற்ற வேண்டும். வியாபாரிகள் இரவு 10 மணி க்கு கடைகளை மூட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்கள் ராஜாராம், கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT