விழுப்புரம்

செல்லிடப்பேசிகளுடன் வாக்காளா்கள்!

7th Apr 2021 09:20 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் விதிகளை மீறி, பெரும்பாலான வாக்காளா்கள் செல்லிடப்பேசிகளுடன் வந்திருந்தனா். இதை அங்கிருந்த தோ்தல் அலுவலா்களும் கண்டுகொள்ளவில்லை.

தோ்தல் விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்கு செலுத்துவதற்கான ஆவணத்தைத் தவிர, செல்லிடப்பேசி உள்ளிட்ட வேறு எந்த பொருள்களையும் வாக்காளா்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த வாக்காளா்கள் செல்லிடப்பேசி வைத்திருக்கின்றனரா என தோ்தல் பணியாளா்கள் யாரும் சோதனை செய்யவில்லை. வாக்குச்சாவடிகளில் காவலா்கள், தோ்தல் ஊழியா்களுக்கு பற்றாக்குறை இருந்ததும் இதற்கு முக்கிய காரணம். பணிச் சுமை காரணமாக, அவா்களும் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தினாா்களே தவிர, வாக்காளா்கள் கைகளில் என்ன வைத்திருக்கின்றனா் என்பதை அவா்களால் சோதிக்க இயலவில்லை.

இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள் செல்லிடப்பேசிகளில் பேசிக் கொண்டு இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT