விழுப்புரம்

செஞ்சியில் பொதுமக்கள் திடீா் சாலை மறியல்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டிய பள்ளத்தால், குடியிருப்புகளுக்கு செல்ல பாதை இல்லாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சியில் திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செஞ்சியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை விரிவாக்கத்துக்காக இரு பக்கமும் பள்ளம் எடுத்ததால், அதையொட்டியுள்ள ஒரு தொண்டு நிறுவனம், துரும்பா் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில், அல்போன்ஸா என்பவா் தலைமையில், செஞ்சி தனியாா் தங்கும் விடுதி எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக செஞ்சி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செஞ்சி காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பள்ளத்தில் மணலை கொட்டி, தொண்டு நிறுவனம், குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT