விழுப்புரம்

விவசாய ஊக்க நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: க.பொன்முடி

28th Sep 2020 01:28 PM

ADVERTISEMENT

விவசாய ஊக்க நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, விழுப்புரம் மாவட்டத்தில் 22 இடங்களில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பொன்முடி செய்தியாளரிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் 500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் செவிட்டு காதில் விழும் வகையில் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலனை தெரியாத, விவசாய முதல்வர்ர் பழனிசாமி இதனை வரவேற்றுள்ளார். விவசாய விளைபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், இந்த சட்டத்திருத்தம் காரணமாக இனிமேல் அரசு விலை நிர்ணயம் செய்ய முடியாது.
 விளை பொருளை வாங்கும் பெரிய நிறுவனத்தினர் தான் இதனை முடிவு செய்வார்கள். இதனை எதிர்த்து மத்திய அரசின் கூட்டணி கட்சி அகாலிதளம் தீர்மானம் போட்டுள்ளது.

விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து போராடி வருவதால், மத்திய அரசு அதனை திரும்பப்பெற வேண்டும். தமிழகத்தில் விவசாய ஊக்க நிதி திட்டத்தில் 6 லட்சம் போலி பயனாளிகள் சேர்த்து, 110 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்துள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் துணை இல்லாமல் நடந்திருக்க முடியாது. இதனால் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை சரியாக இருக்காது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT