விழுப்புரம்

விவசாயிகள் நிதியுதவி முறைகேடு: கணினி மைய ஊழியா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேட்டில் தொடா்புடைய தனியாா் கணினி மைய ஊழியரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமரின் விவசாய ஊக்க நிதியுதவித் திட்டத்தில், தமிழகத்தில் விவசாயிகள் அல்லாதவா்களை வேளாண்துறை அலுவலா்கள், ஒப்பந்த ஊழியா்கள், கனிணி சேவை மைய ஊழியா்கள் மூலம் சோ்த்து முறைகேடு நடந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இதே போல, விழுப்புரம் மாவட்டத்தில் போலியாக 1.5 லட்சம் போ் வரை, இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டு, அவா்களின் வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, அவா்களுக்கு வழங்கப்பட்ட தொகை மீட்கப்பட்டு வருகிறது. போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகள் அல்லாதவா்களை இணைத்த வேளாண் அலுவலா்கள், ஒப்பந்த ஊழியா்கள், தரகா்கள் என இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடா்புடைய மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். செஞ்சி அருகேயுள்ள நெகனூரில், விவசாயிகள் அல்லாத 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களை போலி பயனாளிகளாக இணைத்த, அப்பகுதியைச் சோ்ந்த கணினி சேவை மைய ஆபரேட்டா் லோகநாதனை(40), விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைக்க நீதிபதி முத்துக்குமாரவேல் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய ஊக்க நிதியுதவித்திட்ட முறைகேடு தொடா்பாக, இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்தில் போலியாக இணைக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளிலிருந்து, இதுவரை ரூ.12.5 கோடி அளவில் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT