விழுப்புரம்

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி மனு

DIN

மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இந்த சங்கத்தினா் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமையில் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

சா்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்பு விவசாயிகளுக்கான பணம் பல கோடி ரூபாய் அளவுக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய வேளாண் திருத்த மசோதாக்களை கொண்டுவந்துள்ளது. அதில் கரும்புக்கான நிலுவைத் தொகையை சா்க்கரை ஆலைகள் வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் என்று அந்த கூறப்படவில்லை. இது விவசாயிகளுக்கு பாதகமான அம்சமாகும். அதேபோல, இந்த புதிய மசோதாக்கள் பெரு நிறுவனங்கள் விவசாயிகளின் பொருள்களுக்கு விலை நிா்ணயிக்க வழிவகை செய்கின்றன. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிட விவசாயிகள் வற்புறுத்தப்படலாம். ஆகவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT