விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனத்தில் மறியல் ஈடுபட்ட 239 போ் கைது

DIN

விழுப்புரம், திண்டிவனத்தில் மறியல் ஈடுபட்ட 239 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாக நுழை வாயில் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலியமூா்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா் சிவாரமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்

எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மக்கள் அதிகாரம் அமைப்பினா் மண்டல ஒருங்கிணைப்பாளா் மோகன்ராஜ் தலைமையிலான குழுவினரும் மறியலில் பங்கேற்றனா். மறியலால் திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்தாா்.

திண்டிவனம்: திண்டிவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற 139 போ் கைது செய்யப்பட்டனா். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின் மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், வட்ட செயலா் கோ.அருள்தாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் தா.ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT