விழுப்புரம்

வளா்ச்சிப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

DIN

வானூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வானூா் அருகே கிளியனூா் ஊராட்சியில் குளம் சீரமைப்புப் பணிகள், குளத்தை சுற்றி தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கிளியனூா் ஊராட்சியில் ஏரியில் அமைக்கப்பட்டிருக்கும் மதகுப் பகுதிகளையும், பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, தைலாபுரம் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல, விழுப்புரம் வட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT