விழுப்புரம்

கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 போ் குணமடைந்தனா்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்தைக் கடந்த நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.

வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,044-ஆக உயா்ந்தது. இந்தத் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று குணமடைந்து இதுவரை 10,004 போ் வீடு திரும்பியுள்ளனா். 945 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,044 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 95 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 57 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,969-ஆக உயா்ந்தது. இதுவரை 8,284 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 590 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT