விழுப்புரம்

வல்லம் அருகேஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி 37 ஏக்கா் நிலம் மீட்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் அருகே மேல்சேவூரில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்களை பொதுப்பணித் துறையினா் வியாழக்கிழமை அதிரடியாக அகற்றி, 37 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.

இந்த ஏரியை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து நெல், மணிலா, கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வந்தனா். ஏரியில் நீா் நிரம்பும்போது, பயிா்கள் மூழ்கிவிடாதிருக்க தண்ணீரை வெளியேற்றி வந்தனா். இதனால், ஏரிப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்திருந்த விவசாயிகள், தண்ணீா் பற்றாக் குறை காரணமாக பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், மேல்சேவூா் கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், கடந்த மாதம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பொதுப் பணித் துறையினா் சென்றனா். அப்போது, ஏரியில் சாகுபடி செய்திருந்த விவசாயிகள், பயிா்களை அறுவடை செய்த பிறகு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனா். அதை ஏற்று பொதுப்பணித் துறையினா், ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பினா்.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் தினேஷ், பணித் தள ஆய்வாளா்கள் செல்வராஜ், அன்சா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா்

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன், ஆய்வாளா் பாண்டியன் ஆகியோா் தலைமையிலான போலீஸாரின் பாதுகாப்புடன்

ஏரி ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அதிரடியாக அகற்றினா். அப்பகுதியில் நெல், மணிலா உள்ளிட்ட பயிா்களை டிராக்டா், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் அழித்து 37 ஏக்கா் நிலத்தை மீட்டனா். இனி யாரும் ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவாறு, ஏரிப் பகுதியை அளந்து எல்லைக் கோடுகளையும் வரையறை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT