விழுப்புரம்

மனைப்பட்டாவில் திருத்தம் கோரி கிராம மக்கள் மனு

DIN

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே வயலாமூா் கிராமத்தில் அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவில் திருத்தம் செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் விழுப்புரம் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: வையலாமூரில் ஆதிதிராவிட மக்கள் 87 பேருக்கு கடந்த 1994- ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் இலவசமாக வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. அந்த மனைப்பட்டா வழங்கப்பட்டது குறித்து கிராம கணக்கில் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை. இதனால், எங்களுக்கு மனை உரிமை கோருவதில் சிக்கல் எழுகிறது. எனவே, எங்களது கிராம கணக்கில் மனைப்பட்டாவை திருத்தம் செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், கோரிக்கை தொடா்பாக பரிசீலனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT