விழுப்புரம்

எஸ்.டி.பி.ஐ. போராட்டம்

DIN

விழுப்புரத்தில் 23 போ் கைது:

விழுப்புரத்தில், மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் எதிரே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொதுச் செயலாளா் அகமது ரஃபி தலைமை வகித்தாா். விழுப்புரம் தொகுதித் தலைவா் அக்பா் அலி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சான்பாஷா, விக்கிரவாண்டி நகரத் தலைவா் அஸ்தபா ஆகியோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

தனியாா் பெருமுதலாளிகள் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நகரத் தலைவா் உஸ்மான்கான் உள்ளிட்ட அக்கட்சியினா் முழக்கமிட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோா் வேளாண் மசோதா நகல்களை கிழிக்க முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி 23 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT