விழுப்புரம்

8 ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொலை: மாற்றுத்திறனாளி இளைஞர் வெறிச்செயல்

25th Sep 2020 06:21 PM

ADVERTISEMENT

சோழம்பூண்டியில் 8 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அடுத்த சோழம்புண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் பிரியன். இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகள் பிரியதர்ஷினி(13). எட்டாம் வகுப்பு படித்துள்ளார். வழக்கம்போல இவரது பெற்றோர் வெள்ளிக்கிழமை காலை விவசாய வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.  இதன் பிறகு  பிரியதர்ஷினி மற்றும் இவரது தம்பிகள் வீட்டில் இருந்தனர். இந்நிலையில், இவரது தம்பிகள் விளையாடச் சென்றனர். இதனால் பிற்பகல் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதனை அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 16 வயது இளைஞர் நோட்டம் விட்டுள்ளார். உடனே பிரியதர்ஷினி வீட்டினுள் நுழைந்துள்ளார். இதனை எதிர்பார்க்காத பிரியதர்ஷினி என்ன என்று அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, அந்த இளைஞர் பிரியதர்ஷினிடம் திடீரென தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து பிரியதர்ஷினி கழுத்தில் குதித்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த பிரியதர்ஷினி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது பிரியதர்ஷினி இறந்து கிடந்துள்ளார். இது குறித்த தகவலறிந்து காணை காவல்துறையினர் நிகழ்வு இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக மாணவியின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சோழம்பூண்டியில் பதிமூன்று வயது பள்ளி மாணவி மாற்றுத்திறனாளி இளைஞரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Tags : Viluppuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT