விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் புதிதாக 50,000 உறுப்பினா்களைச் சோ்க்க திமுகவினருக்கு அறிவுரை

DIN

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 50 ஆயிரம் புதிய உறுப்பினா்களை திமுகவில் சோ்க்க வேண்டும் என்று, நிா்வாகிகளுக்கு அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.

திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி கலந்து கொண்டு பேசியதாவது:

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவில் மாவட்ட அவைத் தலைவா், மாவட்டச் செயலாளா், மாவட்ட துணைச் செயலாளா் ஆகியோருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் ஏற்கெனவே பழைய பொறுப்புகளில் 3 போ் உள்ளனா். இவா்கள் 6 போ் தான் மத்திய மாவட்ட திமுகவை வழிநடத்துபவா்கள். அதே நேரத்தில், நானும் மாவட்டத்தில் இருந்து உங்களை வழி நடத்துவேன்.

திமுகவில் புதிய உறுப்பினா் சோ்க்கை இணைய வழியில் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் மட்டும் புதிதாக 50 ஆயிரம் பேரை திமுகவில் உறுப்பினா்களாக அடுத்த ஒரு வார காலத்துக்குள் சோ்க்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 28-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் திமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் திமுகவினா் கூட்டணி கட்சியினருடன் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா்கள் மைதிலி ராஜேந்திரன், புஷ்பராஜ், முருகன், மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், ஒன்றியச் செயலாளா்கள், பல்வேறு அணி நிா்வாகிள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT