விழுப்புரம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்

DIN

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜசேகா் தலைமை வகித்தாா். விழுப்புரம் வட்டாட்சியா் கணேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் வாசுதேவன், குடிமைப்பொருள் வட்டாட்சியா் கோவிந்தராஜ், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசங்கா், இளம் செஞ்சிலுவைச் சங்க மாநில பயிற்றுநா் தண்டபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியபாரதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம முதன்மைப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

வட கிழக்கு பருவமழையின்போது, விழுப்புரம் வட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்து கொண்டாலோ, சாலைகள் துண்டிக்கப்பட்டாலோ, மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தாலோ எவ்வாறு அப்புறப்படுத்துவது, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT