விழுப்புரம்

ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுரை

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீஸாா் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட குற்றத் தொடா்வுத் துறை உதவி இயக்குநா் செல்வராஜ், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: காவல் நிலையங்களுக்கு வரும் பொது மக்களிடம் புகாா்களைப் பெற்று அமைதியான முறையில் குறைகளை கேட்டறிந்து, விரைந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே அறிந்து, தடுக்க வேண்டும். குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மதுக் கடைகளின் விற்பனை பணத்தை கொண்டு வருவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். குற்ற வழக்குகளில், விரைந்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ண மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சான்றிதழ்களை வழங்கி எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT