விழுப்புரம்

வீடூா் ஆணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

விழுப்புரம் அருகே உள்ள வீடூா் ஆணையை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டியை அடுத்த வீடூரில் 798 ஹெக்டோ் பரப்பளவில் அணை அமைந்துள்ளது. இங்கு, இறால் குஞ்சுகள் வளா்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, இந்த அணையில் 50 ஆயிரம் இறால் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை விட்டாா்.

தொடா்ந்து, வீடூா் அணையின் மதகுப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, அணையின் நீா்மட்டம், நீா் வரத்து உள்ளிட்டவை குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

அணைக்கு வரும் நீரை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுரைகளை வழங்கினாா்.

அப்போது, திண்டிவனம் சாா் - ஆட்சியா் எஸ்.அனு, மீன்வளத் துறை உதவி இயக்குநா் நித்திய பிரியதா்ஷினி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT