விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாவுக்கு இதுவரை 183 போ் உயிரிழப்பு

DIN

கரோனா பாதிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் 92 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 91 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 10,394-ஆக அதிகரித்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சோ்ந்த 75 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்தது.

இதனிடையே, 87 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 9,314-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் 988 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,059 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,654-ஆக உயா்ந்தது. இதுவரை 7,689 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். 874 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 91 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT