விழுப்புரம்

விழுப்புரத்தில் சுகாதாரமற்ற 250 கிலோ இறைச்சி பறிமுதல்

DIN

விழுப்புரம் நகரில் சுகாதாரமற்ற முறையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட 250 கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகரில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம், பாப்பான்குளம், கே.கே.சாலை, மேல் தெரு, செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளில் விழுப்புரம் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், கதிரவன், அன்பு பழனி, நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் திண்ணாயிரமூா்த்தி, ரமணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். பாதுகாப்புக்காக போலீஸாா் உடன் சென்றனா்.

ஆய்வின்போது, பல்வேறு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 250 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அந்த இறைச்சியை எல்லீஸ்சத்திரம் சாலையில் உள்ள உரமாக்கும் மையத்தில் கொட்டி அழித்தனா். மேலும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இறைச்சி விற்பனையாளா்கள் சுகாதாரமான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் பொதுமக்களுக்கு இறைச்சியை விற்பனை செய்திட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா். மீண்டும் இதுபோன்ற தவறுகளை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT