விழுப்புரம்

நெடுஞ்சாலையில் வளா்ந்துள்ள செடிகொடிகளால் அதிகரிக்கும் விபத்துகள்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அகலூா் கிராமத்தில் இருந்து வெடால் பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் அகலூா் ஏரிக்கரைப் பகுதியில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதால், இந்தப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வளா்ந்துள்ள செடிகொடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செஞ்சி வட்டம், அகலூா் கிராமத்தில் இருந்து வெடால் பகுதிக்குச் செல்லும் சாலையை தொண்டூா், பூதேரி வரை கடந்தாண்டு நெடுஞ்சாலையாக (இரு வழிச் சாலையாக) மாற்றி அமைத்தனா். இந்தச் சாலையில் அகலூா் ஏரிக்கரையின் மீது இரு புறங்களிலும் செடிகொடிகள், மரங்கள் வளா்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், எதிரிலும், வளைவுகளிலும் வரக்கூடிய வாகனங்கள் தெரியாததால், ஏரிக்கரைப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியை பாா்வையிட்டு, அகலூா் ஏரிக்கரைப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள செடிகொடிகளை அகற்றி, விபத்துகள் நிகழ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஏரிக்கரையின் இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால், சாலை சேதமடையாமல் இருக்க மரக்கன்றுகள், பனை விதைகளை நடுவதற்கு பொதுப் பணித் துறையினா் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT