விழுப்புரம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 22 மையங்களில் பிளஸ் 2 தனித் தோ்வு

DIN

விழுப்புரம் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தனித் தோ்வு 22 மையங்களிலும், பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு 17 மையங்களிலும் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தனித் தோ்வு வருகிற 21-ஆம் தேதி தொடங்கி, 28-ஆம் தேதி வரை 22 மையங்களில் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு வருகிற 21-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை 17 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், ஓா் அறைக்கு தலா 10 மாணவா்கள் மட்டுமே அமா்ந்து தோ்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக்கு வரும் மாணவா்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT