விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 13,587-ஆக இருந்தது.

புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,620-ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 13,175 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 338 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்று பாதித்து வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் 107 போ் பலியாகியுள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10, 213-ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 9,866 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 244 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பலனின்றி 103 போ் வரை பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT