விழுப்புரம்

விழுப்புரத்தில் பாமக பிரமுகர் படுகொலை

25th Oct 2020 05:49 PM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த தலகாணிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகரான பார்த்திபன், சனிக்கிழமை இரவு தலகாணி குப்பத்திலிருந்து மரக்காணம் அடுத்த ஆதிதிராவிடர் உப்பளம் பகுதிக்கு சென்றதாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டனர்.

உப்பளம் பகுதியில் கிடந்த அவரது உடலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்ததையடுத்து, மரக்காணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக புதுவை காலாப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த படுகொலை சம்பவம் குறித்து, மரக்காணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Villupuram
ADVERTISEMENT
ADVERTISEMENT