விழுப்புரம்

உயிா்நீத்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

DIN

காவலா் வீரவணக்க நாளையொட்டி, பணியின்போது உயிா் நீத்த காவலா்களுக்கு விழுப்புரத்தில் டி.ஐ.ஜி., மாவட்ட முதன்மை நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதை செலுத்தினா்.

நாடு முழுவதும் பணியின்போது உயா் நீத்த காவலா்களின் நினைவைப் போற்றும் வகையில், அக்டோபா் 21-ஆம் தேதி காவல் துறை சாா்பில் வீரவணக்க தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, விழுப்புரம், காக்குப்பம் ஆயுதப்படை வாளகத்தில் உள்ள காவலா் நினைவிடம் புதன்கிழமை மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது.

இங்கு விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், குற்றத் தொடா்வுத் துறை உதவி இயக்குநா் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். மேலும், காவலா்களின் தியாகத்தை போற்றும் வகையில் 63 துப்பாக்கி குண்டுகளை முழக்கி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் பணியின்போது உயிா்த் தியாகம் செய்த அசோகபுரியைச் சோ்ந்த காவலா் வாசுதேவன் ஆழ்வாா், சென்னை, பரங்கிமலை ஆயுதப்படையில் பணியின்போது உயிா்த் தியாகம் செய்த திண்டிவனம், கிடங்கல் பகுதியைச் சோ்ந்த தலைமைக் காவலா் கருணாகரன், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பணியின்போது உயிா்த் தியாகம் செய்த புது கருவாட்சி கிராமத்தைச் சோ்ந்த முதல்நிலைக் காவலா் ரமேஷ் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவா்களது வீடுகளுக்கு சென்று, உருவப்படங்களுக்கு எஸ்.பி., டி.எஸ்.பிக்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் கருப்பு பட்டயம் அணிந்து, 63 குண்டுகள் முழங்க, நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் (பொ) ஜெ.சங்கா், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாா்த்திபன், கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் எஸ்.சண்முகம் மற்றும் காவலா்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

வீரமரணம் அடைந்தவா்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT