விழுப்புரம்

ஆசிரியா் பணி நியமனங்கள் தாமதமாவது ஏன்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் விளக்கம்

DIN

ஆசிரியா் காலி பணியிடங்களை நிரப்பும்போது பலா் நீதிமன்றங்களை நாடுவதால், நியமனங்கள் தாமதமாவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி , கடலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மெட்ரிக், சுயநிதி பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் வழங்கும் விழா கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள விநாயகா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் சங்கீதா தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. முனுசாமி வரவேற்றாா். எம்எல்ஏக்கள் இரா. குமரகுரு, அ. பிரபு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் 54 பள்ளிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60, கடலூரில் 66, அரியலூரில் 25 பள்ளிகளுக்கு தொடா் அங்கீகார ஆணைகளை வழங்கினாா். கல்வி அதிகாரிகள், தனியாா் பள்ளி முதல்வா்கள், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா நன்றி கூறினாா்.

விழாவில் பங்கேற்ற அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாடே வியக்கும் வகையில் அரசு நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

இங்குள்ள நல்ல சூழலால் தொழில் முதலீட்டாளா்கள் வருகை அதிகரித்துள்ளது. இயற்கையும் கூட குறிப்பிட்ட காலத்தில் மழையைப் பெய்து உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிவகையாக இருக்கிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்திருக்கிறது.

கல்வித் துறையில் மேலும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்ற உள்ளது. தற்போது 7,500 பள்ளிகளுக்கு ‘ஸ்மாா்ட் கிளாஸ்’ கொண்டு வருவதற்கும், 80 ஆயிரம் அறிதிறன்பேசிகள் வழங்குவதற்கும், 8,027 பள்ளிகளில் ‘அடல் டிங்கரிங் லேப்’ தொடங்குவதற்கும் தயாராக உள்ளது. அரசுப் பள்ளிகளில் தேவையான அளவில் ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியிடங்களை நிரப்பும்போது, பலா் நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடுப்பதால், பணி நியமனங்கள் தாமதமாகிறது. அதைத் தவிா்த்தால், அவா்கள் விருப்பத்துக்கேற்ப காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு தயாராகவே உள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT