விழுப்புரம்

சேதமடைந்த கட்டடங்களை அகற்ற விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேதமடைந்த பழைய கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டுமென, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், கரோனா வைரஸ் தடுப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து, அவரவா்களுக்கு ஒதுக்கியப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனை வளாகங்களில், இடா்பாடுகளுடன் கூடிய கட்டடங்களை அகற்ற வேண்டும்.

மழைக் கால நோய்த் தடுப்பு பணிக்காக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அவசர கால தேவைக்கேற்ப படுக்கை வசதிகள், உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். பாம்பு, தேள்கடிக்கான மருந்துகளையும் வைத்திருக்க வேண்டும்.

அரசுத் துறை அலுவலகங்களில் விபத்தை ஏற்படுத்தும் பயனற்ற கட்டடங்கள், சேதமடைந்த மரங்களை இடித்து அகற்ற வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கையாக பாலங்கள், சிறுபாலங்கள், கழிவு நீா் கால்வாய்களில் நீா் தடையின்றி செல்ல ஏதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.

அலுவலா்கள் மீது நடவடிக்கை: கரோனா நோயைப் பற்றிய விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தியும், தொற்று ஏற்பட்டவா்கள் வீட்டில் தடுப்பு வேலி அமைத்து, வெளியே கிருமி நாசினி தெளித்தும், பிறருக்கு நோய் பரவாமல் தடுக்க அறிவுரை வழங்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தேசிய ஊரக வேலைத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்த ஆட்சியா், இந்தத் திட்டப்பணியில் போதிய முன்னேற்றம் காட்டாத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தாா்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், செயற்பொறியாளா் ராஜா மற்றும் அனைத்துத் துறை முக்கிய அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT