விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் படி, புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,031-ஆக உயா்ந்தது. இதுவரை 9,605 போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 324 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.

விழுப்புரத்தில் 58 பேருக்கு பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனா தொற்றால் 13,185 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,228-ஆக அதிகரித்தது. 73 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,597-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் 527 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 104 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT