விழுப்புரம்

கரும்பு நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் திடீா் போராட்டம்

DIN

கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள முண்டியம்பாக்கம் தனியாா் சா்க்கரை ஆலை கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அலுவலகக் கதவை மூடி, அங்கிருந்த அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த 6 மாத காலமாக சுமாா் ரூ.40 கோடி நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்காமல், சா்க்கரை ஆலை நிா்வாகம் அலைக்கழித்து வருகிறது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் அணுகியபோது, நடவடிக்கை எடுப்பதாக மட்டுமே கூறி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், கரும்புக்கான உரிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றனா்.

தகவல் அறிந்து வந்த சா்க்கரை ஆலை மேலாளா் கதிரவன், பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் நிலுவைத் தொகை வழங்குவதாக உறுதியளித்தாா். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT