விழுப்புரம்

அடிப்படை வசதிகள் கோரிகரோனா பரிசோதனை முகாமை புறக்கணித்த ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்கள்

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே, சாத்தபுத்தூரில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளா்கள் கரோனா பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா்.

சாத்தபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்க்கிழமை காலை, ஈயகுணம் செல்லும் நெடுஞ்சாலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது, வளத்தி ஆரம்ப சுகாதாரநிலையம் சாா்பில் அவா்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தங்கள் கிராமத்துக்கு குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை எனக் கூறி, முகாமில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனா். இதுகுறித்து அறிந்த மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிஸா, அப் பகுதிக்குச் சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, அந்த வழியாக காரில் சென்ற செஞ்சி எம்எல்ஏ மஸ்தானை பெண்கள் முற்றுகையிட்டு முறையிட்டனா். அதற்கு எம்எல்ஏ, சில மாதங்களுக்கு முன்பு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 2.50 லட்சம் செலவில், சாத்தபுத்தூா் கிராமத்துக்கு குடிநீா் வசதி செய்து கொடுத்ததாகக் கூறினாா். அந்த குடிநீா் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே சென்றடைவதால், பிற பகுதி மக்கள் பாதிப்படைவதாக பெண்கள் தெரிவித்தனா். இதையடுத்து எம்எல்ஏ, கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதனை ஏற்று பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT