விழுப்புரம்

வீட்டு வேலை பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுரை

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம் என விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் தனசேகா் அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 17 தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களுக்கு திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், விபத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களையும் அமைப்புசாரா வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளா்கள் நல வாரியத்தில் கட்டாயம் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவு செய்துள்ளலாம்.

ஏற்கெனவே உறுப்பினராக உள்ள மற்ற தொழிலாளா்கள் உறுப்பினா் பதிவை இதே இணைய தளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

SCROLL FOR NEXT