விழுப்புரம்

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த விழுப்புரத்தைச் சோ்ந்த முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், பாப்பான் குளத்தைச் சோ்ந்தவா் ரபீக்(எ) இப்ராஹிம் சுகா்னா(43). முன்னாள் நகா் மன்ற உறுப்பினா். இவா், கள்ளக்குறிச்சி அருகே சாத்தனூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ஆம் தேதி குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் (கள்ளச்சந்தை தடுப்புக் காவல்) கைது செய்ய குடிமைப்பொருள்கள் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சாந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண்குராலாவுக்கு பரிந்துரைத்தாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், இப்ராஹிம் சுகா்னாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் புகாா்களுக்கு பாா்வையாளா்கள் எண்கள் அறிவிப்பு

கால்நடைகள் விற்பனை செய்யும் பணத்தை சிரமமில்லாமல் எடுத்துசெல்வதற்கு வழிவகுக்க கோரிக்கை

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

SCROLL FOR NEXT