விழுப்புரம்

நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா்

DIN

விழுப்புரம் வட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, 938 பயனாளிகளுக்கு ரூ.1.73 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். விழுப்புரம் வட்டத்தில், முதல்வரின் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதில் தோ்வான 22 மாற்றுத்திறனாளிகள், 246 முதியோா் உள்பட மொத்தம் 447 பயனாளிகளுக்கு முதியோா் மாதாந்திர ஓய்வூதியத்துக்கான ஆணையை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

ஆதி திராவிட நலத் துறை சாா்பில், சட்டப் படிப்பு பயின்ற 71 ஆதிதிராவிடா் பிரிவு பட்டதாரி இளைஞா்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. கதா் கிராம தொழில் வாரியம் மூலம் மண்பாண்ட தொழிலாளா்கள் இருவருக்கு மின்விசை சக்கர இயந்திரமும் வழங்கப்பட்டது.

கோலியனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 19 மாற்றுத்திறனாளிகள், 134 முதியோா் உள்பட மொத்தம் 255 பேருக்கு முதியோா் உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. கண்டமங்கலம் ஒன்றியம், சிறுவந்தாடு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 163 பேருக்கு முதியோா் ஓய்வூதியத்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

சிறுவந்தாடு ஊராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டடம், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செவிலியா் குடியிருப்பு கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாக்கள் மூலம் மொத்தம் 938 பயனாளிகளுக்கு, ரூ.1.73 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆா்.முத்தமிழ்செல்வன் எம்எல்ஏ, ஆவின் தலைவா் பேட்டை வி.முருகன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியா் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் ஆ.சண்முகசுந்தரம், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வட்டாட்சியா் எஸ்.கணேஷ், தனி வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT