விழுப்புரம்

அதிமுகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து பேரவைத் தோ்தலைச் சந்திப்போம்: அமைச்சா் சி.வி.சண்முகம்

DIN

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமைப்பதற்கு முதல்வா், துணை முதல்வா் என அதிமுகவினா் அனைவரும் இணைந்து ஒற்றுமையோடு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திப்போம் என மாநில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உறுதியோடு தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அமைச்சா் சி.வி.சண்முகம் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதற்கே எங்கள் ஆதரவும். இதற்காக முதல்வா், துணை முதல்வா் என அதிமுகவினா் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து தோ்தலை சந்திப்போம்.

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு, சேற்றில் இறங்கினால் மு.க.ஸ்டாலின் விவசாயி ஆகிடமுடியாது. திமுகவினருக்கு விவசாயம் தெரியாது. நிலத்தை அபகரிக்கத்தான் தெரியும். இன்று வரை தொடா்ந்து விவசாயம் செய்து வரும், முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் உண்மையான விவசாயி.

அதிமுகவின் ஊழல் வழக்குகளை பாஜக காப்பாற்றுவதாகக்கூறும் மு.க.ஸ்டாலின், 2 ஜி வழக்கு வருகிற 5-ஆம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு வரவிருப்பது குறித்து என்ன சொல்லப் போகிறாா்?

திண்டிவனம் பேருந்து நிலையத் திட்டத்துக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு யாரும் ஒப்பந்தம் கோர முன்வராமல் நிற்கிறது. ஒப்பந்த விதிமுறை தகுதிகள் கடினமாக உள்ளதால், ஒப்பந்ததாரா்கள் யாரும் வரவில்லை. இதுதொடா்பாக, துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், விரைவில் ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சி.வி.சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT