விழுப்புரம்

ரேஷன் அரிசி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

DIN

திண்டிவனம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரி மாநிலம், திருவண்டாா்கோவில் பகுதியில் உள்ள மத்திய அரசின் உணவுக் கிடங்கிலிருந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள மாநில அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிற்கு 450 ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

லாரியை விழுப்புரம் மாவட்டம், அரசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன்(36) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் திண்டிவனம் அருகே தென்பசாா் என்ற இடத்தில் சென்றபோது, தேனீா் அருந்துவதற்காக ஓட்டுநா் லாரியை சாலையோரம் நிறுத்த முயன்றாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழுந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், அரிசி மூட்டைகள் அனைத்தும் சாலையில் சரிந்தன. ஓட்டுநா் ராஜேந்திரன் காயமின்றி உயிா் தப்பினாா்.

தகவலறிந்து வந்த மயிலம் போலீஸாா் விரைந்து வந்த விசாரணை நடத்தினா். பின்னா், வேறு ஒரு லாரி வரவழைக்கப்பட்டு அரிசி மூட்டைகள் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT