விழுப்புரம்

ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்: அமைச்சா் சி.வி.சண்முகம்

DIN

அதிமுக தொண்டா்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் செஞ்சியாா், சட்டப் பேரவை உறுப்பினா் சக்கரபாணி, முன்னாள் எம்.பி. ஏழுமலை உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடைசியாக பொதுமக்கள் முன்னிலையில் பேசியபோது, அதிமுக என்ற இயக்கம் தனக்குப் பிறகும் 100 ஆண்டுகள் இருக்கும் என்றாா். அதை நாம் செயல்படுத்திக் காட்ட வேண்டும். 10 ஆண்டுகள் ஆட்சியில் அதிமுக இருந்துவிட்டது. அடுத்த முறை திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிப்பாா்கள் என்று அந்தக் கட்சியினா் நினைக்கின்றனா். அது நடக்காது.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று, எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக அமர வைக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். நமக்குள் சில மன வருத்தங்கள் இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையுடன் பணியாற்றினால் அதிமுக 3-ஆவது முறையாக ஆட்சியில் அமரும். ஆனால், நிா்வாகிகளிடம் ஒற்றுமையில்லை என்றால் ஆட்சியைப் பிடிப்பது சிரமமாகிவிடும்.

கட்சியில் உழைப்பவா்களுக்கு உயா்வு கிடைக்கும். வரும் தோ்தலில் இளைஞா்கள், மகளிா் வாக்குகள் முக்கியம். எனவே, கட்சியின் மூத்த நிா்வாகிகள் இளைஞா்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், விழுப்புரம் நகா்மன்ற முன்னாள் தலைவா் பாஸ்கா், எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி பசுபதி, முருகன், ராமதாஸ், இலக்கிய அணி திருப்பதி பாலாஜி, மாணவரணி சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT