விழுப்புரம்

விழுப்புரம்: திமுக சார்பில் தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக்கூட்டம்

10th Nov 2020 05:57 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் உள்ளிட்ட 31 இடங்களில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி முன்னிலை வகித்தார்.

மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், எம் என் முருகன், மாநில தீர்மான குழு செயலாளர் ஏஜி சம்பத், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் லட்சுமணன், விவசாய அணி துணை செயலாளர் அண்ணியூர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக வளர்ச்சிக்கு பாடுபட்ட காலம் சென்ற முன்னோடிகள் 110 பேருக்கு பொற்கிழியும், நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சி உள்ளிட்ட 21 இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ, இரா மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : villupuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT