விழுப்புரம்

ஈரோடு: எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கல்

10th Nov 2020 06:03 PM

ADVERTISEMENT

எச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு அரசு தலைமை துணை கண்காணிப்பாளர் ராஜு  புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காலகட்டங்களில் பல்வேறு உதவிகளை பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டுள்ளனர். இதன் ஒரு அங்கமாக "உடுக்கை" (ஏழைகளுக்கு  துணிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் எச்ஐவி நோயால் இறந்த பெற்றோர்களின் ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ள 134 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் உணர்வுகளின் நிறுவனத் தலைவர் டாக்டர்.மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்  காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு  கலந்துகொண்டு  குழந்தைகளுக்கான புத்தாடைகளை மருத்துவர்களிடம் வழங்கினார்.

உணர்வுகளின் தலைவர் மக்கள் ராஜன் பேசுகையில். இனிவரும் காலங்களில் இக்குழந்தைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அவர்கள் படிப்பதற்கு உணர்வுகள் அமைப்பின் சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்து படிக்க வைக்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவி செய்த ஈரோடு அப்துல் கனி மார்க்கெட் சிறு வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகளுக்கும், டாக்டர்.அப்துல் சமது அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், ஆர் எம் ஓ பொறுப்பு டாக்டர் ரவிச்சந்திரன், ஏ ஆர் டி அலுவலகம் அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு, டாக்டர் பரீத், டாக்டர் செந்தில், ஏ ஆர் டி மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா தேவி, ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்வொர்க் நிறுவனர் தங்கமணி, செவிலியர் கண்காணிப்பாளர்  சரஸ்வதி, மூத்த செவிலியர்  சகிலா, செவிலியர் ஜெயந்தி,உணர்வுகளின் நிர்வாகிகள்  மேகலா, பிரபு, புவனேஷ், சவுஜன்ய,  கவிதா, நவீன், கார்த்தி, ஸ்னேகா, ஆரிப் அலி, சர்வேஸ்வரன், ஸ்மிதா, செல்வா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT