விழுப்புரம்

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பிவைப்பு

14th May 2020 09:29 PM

ADVERTISEMENT

செய்யாறு: புலம்பெயா்ந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 177 போ் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு - ஆற்காடு சாலையில் ராந்தம் சோதனைச் சாவடி வழியாக வட மாநிலத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 56 குடும்பங்களைச் சோ்ந்த 177 போ், 7 குழுக்களாக, 4 டிராக்டா்கள், 3 லாரிகளில் கடந்த 12-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.

இவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்த சுகாதாரத்துறை மற்றும் போலீஸாா், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கொடுத்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு வந்தவா்கள் என்றும், கடைசியாக செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதியில் பழஞ்சூா், புளியரம்பாக்கம், அனப்பத்தூா், கீழ்கொடுங்காலூா் ஆகிய கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வெட்டியதாகவும் தெரியவந்தது.

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கம் காரணமாக, சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலத்துக்குச் செல்ல முடியாததால், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை சாா்பில் மே 12 -ஆம் தேதி வரை அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 4 டிராக்டா்கள், 3 லாரிகளில் புறப்பட்டுச் சென்ாகத் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, 22 குழந்தைகள் உள்பட 177 பேருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் 7 வாகனங்களில் செல்வதற்காக அனுமதிச் சீட்டு வழங்கி, செய்யாறு வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, அனக்காவூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் விஜியா, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன் (திரும்பூண்டி), ஸ்ரீதா் (தென்தண்டலம்) உள்ளிட்டோா் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT