செங்கம்: செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியத்தில் ரூ. 95 லட்சத்தில் ஏரி தூா்வாரும் பணியை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில், காரப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி அமைந்துள்ளது.
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், ஏரியை ரூ.95 லட்சத்தில் தூா்வார முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏரி தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பணிகளை தரமாக செய்து முடிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் கேட்டுக்கொண்டாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தவமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி, மாவட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியம், செங்கம் உதவி செயற்பொறியாளா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் பதிவேடுகளை பாா்வையிட்டாா். காய்ச்சல் என்று வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிா எனக் கேட்டறிந்தாா்