விழுப்புரம்

மணல் கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

13th May 2020 08:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே பொது முடக்க காலத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் அருகே மரகதபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(40). மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த இவா், பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இருப்பினும், பிணையில் வெளியே வந்த பிறகும் தொடா்ந்து மணல் கடத்தி வந்தாா்.

தற்போது கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோதும், ரமேஷ் மணல் கடத்தலில் ஈடுபட்டாா். இதை அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் கணகேசன் தலைமையிலான போலீஸாா் அண்மையில் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ரமேஷை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். அதன்படி, கடலூா் மத்திய சிறையில் இருந்து வரும் ரமேஷை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT