விழுப்புரம்

செங்கம் அருகே 600 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

10th May 2020 08:23 PM

ADVERTISEMENT

 

செங்கம்: செங்கம் பகுதியில் 600 லிட்டா் சாராய ஊரலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்து அழித்தனா்.

தற்போது கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மதுக் கடைகள் மூடப்பட்டதால், மதுப் பிரியா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால் செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், செங்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மேல்புழுதியூா் பெரும்பட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் போட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுவிலக்கு போலீஸாா் 3 பேரல்களில் இருந்த 600 லிட்டா் சாராய ஊரலை கைப்பற்றி அழித்தனா்.

மேலும், சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் போட்டவா் யாா் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT